×

மீளவிட்டான்- தூத்துக்குடி இரட்டை பாதையில் நாளை அதிவேக ரயில் இன்ஜின் இயக்கி சோதனை பொதுமக்கள் தண்டவாளம் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

 

தூத்துக்குடி, ஜூலை 10: மதுரை- தூத்துக்குடி இரட்டை ரயில் பாதையில் மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி வரை நாளை (11ம் தேதி) அதிவேக ரயில் இன்ஜின் இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை 158.81 கிமீ தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணி கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது. ரூ.1890.66 கோடி செலவில் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் 11 பிரிவுகளாக பிரித்து மேற்கொள்ளப்பட்ட இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அதிவேக ரயில்கள் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையம் வரையிலான 7.65 கி.மீ. தொலைவிலான இரட்டை ரயில் பாதை பணிகளும் நிறைவடைந்த நிலையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் மதுக்கர் சவுத்ரி நாளை (11ம் தேதி) புதிய இரட்டை ரயில் பாதையில் பாதுகாப்பு குறித்து சோதனை நடத்துகிறார்.

இதையொட்டி நாளை காலை 9 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து மோட்டார் டிராலி மூலம் தண்டவாள பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளதா? மின்மயமாக்க பணிகள் தரமாக செய்யப்பட்டு உள்ளதா? என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொள்கிறார். மதியம் அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக தட்டப்பாறை ரயில் நிலைய்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ரயில் இன்ஜின் புறப்பட்டு, 4 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. பின்னர் 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு தட்டப்பாறையை ரயில் நிலையத்திற்கு செல்கிறது. இந்த அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி ரயில் நிலையம் வரை பொதுமக்கள் யாரும் 3 மணி முதல் 5 மணி வரையில் தண்டவாளத்தின் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கபட்டுள்ளது.

The post மீளவிட்டான்- தூத்துக்குடி இரட்டை பாதையில் நாளை அதிவேக ரயில் இன்ஜின் இயக்கி சோதனை பொதுமக்கள் தண்டவாளம் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Revivedtan ,-speed train engine driver test ,Thoothukudi ,Madurai ,-Tuticorin ,Kyavittan ,Tuticorin ,-Tuticorin double track ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...